- உடலில் இருந்து கழிவுப்பொருட்களை நீக்குதல்:
நாம் உண்ணும் உணவின் மூலம் கழிவுப்பொருட்கள் உடலில் சேருகின்றன. உடல் புரதங்களைப் பயன்படுத்திய பிறகு மீதமுள்ள புரதக் கழிவுகள் யூரியா என்று அழைக்கப்படுகின்றன. அதேபோல், தசைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கழிவுப்பொருட்கள் கிரியேட்டினின் என்று அழைக்கப்படுகின்றன. யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் முக்கியமான வேலையாகும்.
- உடலில் நீரின் அளவை சீராக பார்த்துக் கொள்வது.
நம் உடலில் உள்ள நீரின் அளவை சீராக வைத்திருப்பது சிறுநீரகத்தின் வேலை, நாம் சில நேரங்களில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தண்ணீர் குடிக்கும்போது அதை சமநிலைப்படுத்துகிறது.
- உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருத்தல்:

நமது சிறுநீரகங்கள் ரெனின், ஆஞ்சியோடென்சின் மற்றும் அல்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன, இது நமது உடலில் நிலையான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
- நம் உடலில் உப்பு மற்றும் எலக்ட்ரோலைட்களை ஒழுங்குபடுத்துதல்:
நமது உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம், குளோரைடு மற்றும் பைகார்பனேட் அளவைக் கட்டுப்படுத்துவது சிறுநீரகத்தின் வேலை.
- இரத்த உற்பத்தியில் உதவி செய்தல்:
இரத்த உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபொய்டின், என்பது சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
- வைட்டமின் டி யை உற்பத்தி செய்வது

நமது எலும்புகளை வலுவாக்க வைட்டமின் டி தேவை. அந்த வைட்டமின் டி யை உருவாக்குவதும் நமது சிறுநீரகங்களே.