நமது சிறுநீரகம் என்னென்ன வேலை  செய்கின்றது.

உடலில் இருந்து கழிவுப்பொருட்களை நீக்குதல்: நாம் உண்ணும் உணவின் மூலம் கழிவுப்பொருட்கள் உடலில் சேருகின்றன. உடல் புரதங்களைப் பயன்படுத்திய பிறகு மீதமுள்ள புரதக் கழிவுகள் யூரியா என்று அழைக்கப்படுகின்றன. அதேபோல், தசைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கழிவுப்பொருட்கள் கிரியேட்டினின் என்று அழைக்கப்படுகின்றன. யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் முக்கியமான வேலையாகும்.   உடலில் நீரின் அளவை சீராக பார்த்துக் கொள்வது. நம் உடலில் உள்ள நீரின் அளவை சீராக வைத்திருப்பது சிறுநீரகத்தின் வேலை, […]