SGH-Logo-new---1(1)

23, B, Ramakrishna Rd, Hasthampatti

Salem, Tamil Nadu 636007

Call Us

+91 9894352229

Follow us :

சிறுநீரக பாதிப்புகள்

கேள்விகளும், பதில்களும்!

சிறுநீரக பாதிப்புகள்
கேள்விகளும், பதில்களும்!

புத்தகத்தைக் கேள்வி – பதில் பாணியிலே எழுதி வெளியிடுவதிலே மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் காலத்திலே, சிறுநீரக பாதிப்புகள் அதிகமாக ஏற்படுவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். நீங்களும் அதனை உணர்ந்திருப்பீர்கள். நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம் போன்றவற்றால் சிறுநீரக வியாதிகள் அதிகமாக ஏற்பட்டாலும் இதற்கான வேறுசில முக்கியமான காரணங்களும் உள்ளன. இவற்றைப்பற்றிய விழிப்புணர்வு நம் அனைவருக்கும் தேவைப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் எளிதில் புரிந்து கொள்வதற்காக, இலகுவான தமிழில், கேள்வி பதில் பாணியில் இதனை வடிவமைத்திருக்கிறோம்.

அதற்கான காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள், செய்யவேண்டிய முன் நடவடிக்கைகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சைமுறைகளைப்பற்றி, சுருக்கமாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலே எழுதப்பட்டுள்ளது. இந்த வியாதியைப் பற்றிய சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றது.
சிறுநீரக பாதிப்புகளைப் பற்றிய உண்மைகளை நீங்கள் தெரிந்து கொண்டு, ஆரோக்கியமாக வாழ இந்த சிறிய முயற்சி உதவியாயிருக்கும் என்று நம்புகிறோம்.

உள்ளடக்கம்

1. அறிமுகம்
2. சிறுநீரகம் மற்றும் அதன் செயல்பாடுகள்
3. சிறுநீரக நோய்களின் வகைகள்
4. கடுமையாக திடீர் சிறுநீரக செயலிழப்பின் (AKI) காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்:
5. நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான (CKD) காரணங்கள், அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்புமுறைகள்
6. நாள்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை முறை
 7. சிறுநீரக நோய் பற்றிய கட்டுக்கதைகள் – அதற்கான விளக்கங்கள்
8. டயாலிசிஸ் & டயாலிஸிஸ் வகைகள்
9. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
10. நெப்ரோடிக் சிண்ட்ரோம்
11. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்
12. சிறுநீர் பாதை தொற்று
13. நெப்ராலஜி மற்றும் யூராலஜி இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு
14. யூராலஜி
15. புரோஸ்டேட் கட்டி வீக்கம் (Benign Prostate Hyperplasia)
16. சிறுநீரக பாதிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்கான அடிப்படை ஆய்வக சோதனைகள்
17. உணவு முறை
18. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு விளக்கமான பதில்களும்

About the Authors

டாக்டர்.ஜோன்ஸ் ரொனால்ட் BSc ,MD , MNAMS, DM(Neph),

அவர்கள் ஆரம்ப மருத்துப் படிப்பினை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் (1968) பயின்று, பொது மருத்துச் சிறப்புப் படிப்பை மதுரை மருத்துவக் கல்லுரியிலே(1976) படித்து, சிறுநீரக மருத்துவ மேல்படிப்பினைச் சென்னை மருத்துவக்  கல்லுரியிலே(1984) முடித்து, அதன் பின்பு, சிறுநீரக மருத்துவ சிகிச்சைத் துறையில் 35 வருடங்களுக்கு மேலாக சேலத்தில் பணியாற்றி வருகிறார். சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரக மருத்துவத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். ஓய்வு பெற்றபின், சேலம் விம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவராகவும், சேலம் கோபி மருத்துவமனையில் ஆரம்பகாலமுதல் சிறுநீரக மருத்துவ ஆலோசகராகவும் தொடர்ந்து இருந்துவருகிறார். சிறுநீரக பாதிப்புகளைப் பற்றி, பத்திரிக்கைகள், புத்தகங்கள், தொலைக்காட்சி மற்றும் எப்.எம்.வானொலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். அநேக தேசிய மருத்துவக்கருத்தரங்குகளில் சிறுநீரக பாதிப்புகளைப் பற்றி உரையாற்றி, பாராட்டுதல்களையும், விருதுகளையும் பெற்றவர். சிறுநீரக மருத்துவ சிகிச்சை ஆலோசகராக, நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்துவரும் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டிருக்கின்றது. தம் அனுபவத்தின் அடிப்படையில், சிறுநீரக பாதிப்புகளைப் பற்றியும், அதன் காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும், வினா விடைகளாக எளிதில் அனைவரும்  படித்து புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்து, இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

டாக்டர். ஹரி ஜானகிராமன் M.D., D.N.B(Nephro),

அவர்கள் சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆலோசகராக  15 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். பெங்களுர் மணிபால் மருத்துவமனையில் பயிற்சி சிறுநீரக மருத்துவராக பணியாற்றி, தற்போது சேலம் கோபி மருத்துவமனையில் 15 வருடத்திற்கும் மேல் சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆலோசகராக இருந்துவருகிறார். மருத்துவக்கருத்தரங்குகளில் சிறுநீரக பாதிப்புகளைப் பற்றி உரையாற்றியுள்ளார். மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டவர். அதுமட்டும் அல்லாது மூளைச்சாவு பிரகடனம் மற்றும் உடல் உறுப்புதானம் பற்றிய  நிபுணத்துவம் கொண்டவர். பல வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் காவல் துறையிடத்தில் சிறப்புரை ஆற்றுவதை தொடர்ச்சியாக கொண்டிருக்கிறார். சேலத்தில் முதல் முதலாக மூளைச்சாவு பிரகடனம் மற்றும் உடல் உறுப்புதானம் செய்த நிகழ்வு அவருடைய மேற்பார்வையில் நடந்தது. தன் அனுபவத்தின் அடிப்படையில் இந்தப் புத்தகத்திலே சிறுநீரக சிகிச்சையைக் குறித்த சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

Thina thanthi 08/07/2024

Dinakaran 08/07/2024

Dinamani 08/07/2024

Kalai kathir 08/07/2024

Online Link

Make Appointment

Getting an accurate diagnosis can be one of the most impactful experiences that you can have — especially if you’ve been in search of that answer for a while. We can help you get there.

Contact Info

Stay connected with Salem Gopi Hospital